திருச்சி, துவாக்குடியில் மருத்துவரை தாக்கி கிளினிக்கில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கிய 2 பேர் கைது…!
திருச்சி, துவாக்குடியை சேர்ந்தவர் முகமது (45). மருத்துவரான இவர் துவாக்குடியில் கிளினிக் ஒன்றையும், அந்தக் கட்டிடத்தில் கூரியர் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் துவாக்குடி வாழவந்தான்கோட்டை பகுதியை சேர்ந்த பிரதீப் (47) என்பவருக்கு வந்த பார்சல் பெரிதாக இருந்ததால், நேரில் வந்து பெற்றுக்கொள்ளும்படி முகமது கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவனைக்கு வந்த பிரதீப், பார்சலை நேரில் கொடுக்க முடியாதா? எனக் கேட்டு மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது நண்பரான வாழவந்தான்கோட்டை காமாட்சி அம்மன் கோயில் தெரு கலைவாணன் (28) என்பவருடன் அவரைத் தாக்கி, மருத்துவமனையிலுள்ள பொருள்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப் பதிந்து பிரதீப் மற்றும் கலைவாணன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Comments are closed.