Rock Fort Times
Online News

மதுரையில் ரயில் பெட்டியில் தீப்பிடித்து 10 பேர் பலி…

கேஸ் சிலிண்டர் வெடித்ததால் விபரீதம்...

மதுரை போடி ரயில் தடத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. சுற்றுலா ரயில் நேற்றிரவு (25.08.2023 ) நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது சிலர் சமையல் கேஸ், மூலம் டீ போட முயன்றதாக தெரிகிறது. அப்போது காலை 5.30 மணி அளவில் சிலிண்டர் வெடித்து அந்த ரயில் பெட்டியில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் ரயில் பெட்டி முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே ஊழியர்கள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும், இந்த தீ விபத்தில் 10  பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த 90 பேரில் 80 பேர் தப்பி ஓடியதாக தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் , பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த ரயில் விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மிகப் பயணமாக 60-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் தமிழகம் வந்தனர். இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத்தலங்களுக்கு சென்றுள்ளனர். கடைசியாக நேற்று நாகர்கோவிலில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை 3.45 மணியளவில் மதுரை வந்துள்ளனர். புணலூரில் இருந்துவந்த ரயில் மூலம் அவர்கள் மதுரை வந்தனர். அவர்கள் வந்த இரண்டு ரயில் பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்ட மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கனெக்டிங் ரயில் மூலமாக நாளை சென்னை செல்லவிருந்தனர். இந்த தீ விபத்தில்
55 பேர் உயிர் தப்பினர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை ரயில் நிலையத்துக்குள்ளும், ரயிலிலும் எடுத்துச் செல்லக் கூடாது என்று தெற்கு ரயில்வே மீண்டும் எச்சரித்துள்ளது.

மேலும், விபத்து குறித்து தகவல்கள் அறிய 93605 52608, 80156 81915 ஆகிய இரண்டு கட்டணமில்லாத தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனிடையே விபத்துக்குள்ளான ரயிலில் தீப்பற்றி எரிந்தபோது மற்றொரு பயணிகள் ரயில் அருகிலேயே சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்