Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ 80 லட்சம் …!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் எண்ணப்படும். அந்த வகையில் இன்று ( 25.08.2023) காலை இணை ஆணையர் செ. மாரியப்பன் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் உதவி ஆணையர் ஆர் .ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் காணிக்கை பொருட்கள் எண்ணப்பட்டன. அப்போது உண்டியல்கள் மூலம் கோவிலுக்கு ரூ.79,96,950 லட்சம் ரொக்கமும், 72 கிராம் தங்கமும், 1250 கிராம் வெள்ளியும், 222 வெளிநாட்டு கரன்சிகளும் வருவாயாக கிடைத்திருந்தன. காணிக்கை எண்ணும் பணியின் போது கோவில் மேலாளர் கு.தமிழ்செல்வி, கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் , சரண்யா , மீனாட்சி ,வெங்கடேசன் , வேல்முருகன் ஆய்வாளர்கள் மங்கையர்ச்செல்வி, பாஸ்கர், ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்