திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில், நிரந்தர பணியாளரான சரசு(54) என்பவர் குப்பைகளை எந்திரத்தில் கொட்டி அரைத்து உரமாக மாற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கை எந்திரத்தில் சிக்கிக்கொண்டது. இதில், அவரது வலது கை துண்டானது. உடனே, சக தொழிலாளர்கள் எந்திரத்தை நிறுத்தி சரசுவை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.