Rock Fort Times
Online News

ரயில் நிற்கும் முன் இறங்கியதால் விபரீதம்: எக்ஸ்பிரஸ் ரயிலின் அடியில் சிக்கிய ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி உயிருடன் மீட்பு…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியான  இவர், காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று(27-08-2024) காலை திருச்சி ஜங்சன்  ரயில் நிலையம் வந்தார். ரயில் நடைமேடைக்கு உள்ளே வந்து கொண்டிருந்தபோது ஜெயச்சந்திரன்,  ரயில் நிற்பதற்கு முன்னதாகவே ரயிலில் இருந்து இறங்க முயன்றதாக கூறப்படுகிறது.  இதனால், அவர் நடைமேடைக்கும், எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதனால், மற்ற பயணிகள் அபய குரல் எழுப்பினர். உடனே ரயில் நிறுத்தப்பட்டது.  இதை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் நடைமேடையில் நின்று கொண்டிருந்த பயணிகள் ஓடி வந்து அவரை உயிருடன் மீட்டனர். இதில் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.  பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக ஜெயச்சந்திரனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்தச் சம்பவத்தால் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்