இந்துக்களின் முக்கிய பண்டிகைகளும் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி விழா. இந்த விழா ஸ்ரீரங்கம் பரத நாட்டியாலயா பள்ளியில் ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் இன்றைய தினம்(26-08-2024) கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 50க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்று திரண்டு கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. அவர்களுக்கு இனிப்பு மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா பள்ளி நிறுவனர் ரேவதி முத்துசாமி செய்திருந்தார்.



Comments are closed.