மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், டில்லியில் சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 57வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில், தமிழகத்தில் வாகன சோதனை தொடர்பாக, வணிக வரித்துறை ஆணையர் நாகராஜன் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி, சரக்கு போக்குவரத்து வாகனங்களை, வணிக வரித்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக நிறுத்தி சோதனை செய்யக்கூடாது. குறிப்பிட்ட உளவு தகவல் மற்றும் இணை ஆணையரின் அனுமதி இருந்தால் மட்டுமே, சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதிக்க வேண்டும். வணிக வரித்துறையின் நுண்ணறிவு பிரிவில் செயல்பட்டு வந்த, ‘ரோவிங் ஸ்குவாட்’ எனப்படும், சுற்று வட்டார கண்காணிப்பு குழுக்கள், இனிமேல், ‘பிளையிங் ஸ்குவாட்’ அதாவது பறக்கும் படைகள் என, அழைக்கப்படும். இவை விருப்பம் போல் செயல்படக் கூடாது. இணை ஆணையர் அறிவுறுத்தல்படியே, பறக்கும் படைகள், வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.