திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் பகுதியில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இது ஒரு பழமையான மார்க்கெட்டாகும். இங்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட 84 கடைகள், மட்டுமல்லாமல் வெளியில் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி, பழங்கள், இலை, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் பகுதி மக்களுக்கு இது பிரதான மார்க்கெட் ஆக இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக ஸ்ரீரங்கம், மேலூர், தெப்பக்குள தெரு, தேவி தெரு, சிங்கபெருமாள் கோவில் தெரு, திருவானைக்காவல் ஓம் சக்தி கோவில், பெரியார் நகர் ஆகிய 6 இடங்களில் வாரச்சந்தைகள் செயல்பட தொடங்கின. இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள பொது மக்கள் வாரச்சந்தைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க தொடங்கினர். இதனால் ஸ்ரீரங்கம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று ( 09.10.2023 ) ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் வாரச்சந்தைகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி திடீர் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டதால் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட காய்கறி வியாபாாிகள் வாரச்சந்தைகளுக்கு தடை விதிக்க கோாி மாவட்ட ஆட்சியாிடம் மனு கொடுத்தனா் .
Comments are closed, but trackbacks and pingbacks are open.