Rock Fort Times
Online News

நாளை கருணாநிதி நினைவு தினம்: திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் அறிக்கை…!

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (07-08-2024) கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு நாளை காலை 8 மணியளவில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி, திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
அதேபோல  மத்திய, வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக்கழகங்களின் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கப்படுகிறது.  இந்நிகழ்ச்சிகளில்  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்  இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்