திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றிய 5 சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி கண்டோன்மெண்ட் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றிய துரைராஜ், திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணியாற்றிய ரவிசங்கர், மாநகர குற்றப்பிரிவில் பணியாற்றிய பால்தாஸ், தில்லைநகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய நாகநந்தன், விமான நிலைய காவல் நிலையத்தில் பணியாற்றிய பாஸ்கரமூர்த்தி ஆகிய 5 பேரும் ஸ்ரீரங்கம் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையர் ந.காமினி பிறப்பித்துள்ளார்.

Comments are closed.