அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மை தேர்வுக்கான இலவச வீடியோ பயிற்சி வகுப்பு இன்று (24.07.2023 ) முதல் துவங்க உள்ளது. தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தன் Aimtn youtube சேனல் வழியே போட்டி தேர்வுகளுக்கு இலவச இணையதள வகுப்புகளை நடத்தி வருகிறது. அடுத்த மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த தேர்வை எழுத மாணவ-மாணவியர் இப்போதிலிருந்து தயார் நிலையில் இருக்க வேண்டும். எனவே, அவர்களுக்கு உதவும் முயற்சியாக அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி குரூப்-1 போட்டிக்கான இணையதள வகுப்புகளை தன் youtubeசேனல் வாயிலாக இன்று ஆரம்பிக்க உள்ளது. இப்பயிற்சியில் தினசரி 3 வீடியோ விதம் 180 வீடியோக்கள் அதற்கான பட குறிப்புகளுடன் பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாணவ -மாணவியர் “நோக்கம்” மொபைல் ஆப் வழியே மாதிரி தேர்வுகளை எழுதலாம். அவர்கள் எழுதிய தேர்வுக்கான விடைகளை அவற்றுக்கான விவர குறிப்புகளுடன் சரி பார்த்துக் கொள்ளும் வசதி இதில் உள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 2:30 மணிக்கு ஆசிரியர்களுடன் ஆன்லைனிலேயே நேரடி தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.