Rock Fort Times
Online News

திருவண்ணாமலை தி.மு.க.எம்.பி. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை…!

திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி. அண்ணாதுரையின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று(25-09-2026) சோதனை நடத்தி வருகின்றனர். எம்பி அண்ணாதுரை நெடுஞ்சாலைத் துறையின் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரராக இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலை அமைத்தல், பாலம் கட்டுதல் போன்ற பணிகளை செய்து வருகிறார். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக நெடுஞ்சாலை துறையில் பல்வேறு பணிகளை செய்து வரும் நிலையில், இந்த காலகட்டங்களில் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்