Rock Fort Times
Online News

வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.31 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்…!

சிங்கப்பூரிலிருந்து தனியார் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இரு பயணிகள் தங்களது உள்ளாடைக்குள் மறைத்து ரூ.90.33 லட்சம் மதிப்பிலான 591.5 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோன்று துபாயிலிருந்து திருச்சி வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சோதனை செய்தபோது பயணி ஒருவர் தனது சட்டை பட்டனில் மறைத்து வைத்தும், கைப்பையில் மறைத்தும் கடத்தி வந்த ரூ.41 லட்சம் மதிப்புள்ள 265.5 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவர்கள் 3 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.1.31 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்