Rock Fort Times
Online News

திருச்சியில் ரயிலை மறிக்க முயன்றவர்கள் கைது…!

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகள் பதவி விலக கோரியும், மணிப்பூரில் வாழும் பழங்குடி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் நிறுவனத் தலைவர் வக்கீல் பொன்.முருகேசன் தலைமையில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடத்த முயற்சி நடந்தது. இதில், நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜங்ஷன் ரவுண்டானாவில் இருந்து ரயில் நிலையம் நோக்கி சென்றனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர் . அப்போது தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் திருச்சி மாவட்ட செயலாளர் பிரவீன், கரூர் மாவட்ட தலைவர் சக்திவேல், கரூர் மாவட்ட செயலாளர் ஜானகிராமன், நிர்வாகிகள் முரளி சங்கர், செந்தமிழ், சிவக்குமார், பெரியசாமி, சரத் பாண்டியன், ராஜவேல் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்