Rock Fort Times
Online News

துவரங்குறிச்சி அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து பணம், ஆவணங்கள் திருட்டு…

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மணப்பாறை சாலையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் நகைகள் ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏலத்தில் பங்கேற்பதற்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த விகாஸ் (42), முகிலன் (30), மாதவன் (27) மற்றும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சாமிநாதன் (60) ஆகிய 4 பேரும் ஒரு காரில் வந்தனர். ஆனால், ஏலத்திற்கான நேரம் முடிந்துவிட்டதால் ஏலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனையடுத்து டீ குடிப்பதற்காக காரை மணப்பாறை சாலையில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று டீ குடித்தனர். பின்னர் வந்து பார்த்தபோது காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் கார்டுகள், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆர்சி புத்தகம், 7000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசில் அவர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்