Rock Fort Times
Online News

தேர்தலில் கூட்டணி குறித்து விரைவில் முடிவு- சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்…!

தேர்தலில் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் என்றார் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை முன்னணி தலைவர்களுடன் நடைபெற்றுள்ளது. கும்பகோணத்தில் எங்கள் கட்சியின் சார்பில் உயர்மட்ட குழு நடைபெற உள்ளதால் அதன் பின்பு முடிவு செய்யப்படும். அதிமுகவில் கூட்டணி தவறாகி விடக்கூடாது, வெற்றியாக அமைய வேண்டும் என்பதற்காக கலந்து ஆலோசித்து முடிவு செய்யவுள்ளோம். தற்போது அமையப்போகும் கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அதனை கருத்தில் கொண்டு கூட்டணி முடிவு எடுக்கப்படும். அதுபோல அரசியல் ரீதியான தேசிய நீரோட்டத்தில் தான் எல்லோரும் இருக்கிறோம். எனவே என்டிஏ கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பது விரைவில் தெரியவரும். கூட்டணி அமைந்த பிறகு எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து தெரிவிப்போம். எங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவோம். காங்கிரஸிலிருந்து விஜயதாரணி பாஜகவில் இணைந்தது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றார்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்