திருச்சியில் இன்று ( 27.07.2023 ) காலை நடைபெற்ற வேளாண்மை கண்காட்சியை துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவெறும்பூர் வழியாக தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தார். 11-35 மணி அளவில் துவாக்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முதல்வர் சென்றபோது அவர் பயணித்த காரின் பின்பக்க டயர் திடீரென்று பஞ்சரானது. உடனே கார் ஓரமாக நிறுத்தப்பட்டது. முதல்வர் உடனடியாக பாதுகாப்பாக இறக்கப்பட்டு அமைச்சர் நேருவின் காரில் ஏறி தஞ்சாவூர் சென்றார். போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக வந்து டயரை கழற்றி புதிய டயர் மாற்றினர். பின்னர் 11:54 மணிக்கு முதல்வரின் கார் தஞ்சாவூர் சென்றது. முதல்வரின் கார் பஞ்சரானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.