Rock Fort Times
Online News

மீஞ்சூர் அருகே வீடு புகுந்து கல்லூரி மாணவியை சரமாரியாக வெட்டிய போதை கும்பல்…!

சென்னை அருகே மீஞ்சூரில் உள்ள தனது இல்லத்தில் கல்லூரி மாணவி ஒருவர் செமஸ்டர் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தார். அப்போது இரவு அவரது வீட்டுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அந்த மாணவி கூச்சலிடவே, போதையில் இருந்த 3 பேரும் மாணவியை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் மாணவியின் கை, பின்னந்தலை, கால்களில் வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. மாணவியை வீடு புகுந்து வெட்டிவிட்டு தப்பிகும்பலில் ஒருவனை அக்கம்பக்கத்தினர் பிடித்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பின்னர், மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து கல்லூரி மாணவி வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்