பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞா் எம்.சரவணன் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி புத்தூர் நால் ரோட்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சிலை உள்ளது . இந்த சிலைக்கு அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வரும் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை சிலைக்கு அருகே வீசி விட்டு சென்று விடுகின்றனர். மேலும், சிலையை சுற்றி அசுத்தம் செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடை முன்பு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு நின்று தான் பொதுமக்கள் பஸ் ஏறுகின்றனர். இதன் காரணமாக தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆகவே, இந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.