திருச்சி மாவட்டத்தில் கோடை மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருந்தாலும் மழையின் காரணமாக பெரும்பாலான சாலைகள் மழை நீரால் அரிக்கப்பட்டு குண்டும்- குழியுமாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக திருச்சி மெயின்கார்டுகேட் சிக்னல் பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்தது. இதனால், வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
எனவே இந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசு, தலைமை காவலர் மெர்லின், சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவேல் மற்றும் முதல் நிலை காவலர் பொன்ராஜ் ஆகியோர் தாமாக முன்வந்து குண்டும், குழியுமான காணப்பட்ட சாலையை சீரமைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Comments are closed.