மேல்நாட்டு கல்வி முறை பற்றி அறிந்து கொள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம்…!
மேல்நாட்டு கல்வி முறை குறித்து அறிந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டென்மார்க், சுவீடன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கல்வி பயணம் மேற்கொண்டுள்ளார். நார்வே சென்ற அவர், அங்குள்ள அறிவியல் பல்கலைக்கழக நூலகத்தை பார்வையிட்டார். அப்போது அங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் தலைமை நிர்வாகிகளிடம் கலந்துரையாடிய அவர், தொடர்ந்து நார்வே நாட்டின் ஆசிரியர்களை தமிழகத்துக்கு அழைத்து வந்தும், நமது ஆசிரியர்களை அந்நாட்டிற்கு அனுப்பியும், அறிவுசார் பரிமாற்றம் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை முன்வைத்தார்.
அதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளிக் கல்வித் திட்டங்கள் குறித்த புத்தகத்தை அவர்களிடம் வழங்கி, அத்திட்டங்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்ததோடு தமிழகத்துக்கு வருகை தருமாறும் நார்வே அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
Comments are closed.