எந்த இடத்தில் வாக்கு குறைகிறதோ அந்த இடத்தின் பொறுப்பாளர் பதில் சொல்ல வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி, 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது. கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. தேனி தொகுதியில் மட்டும் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்த முறை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியும் என மொத்தம் 40 தொகுதிகளையும் கைப்பற்ற திமுக முனைப்பு காட்டி வருகிறது. இதுதொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (20-03-2024) மாவட்ட செயலாளர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், தொகுதியில் வாக்கு குறைந்தால் அதற்கு மாவட்ட செயலாளரும், பொறுப்பு அமைச்சரும்தான் பொறுப்பேற்று பதில் அளிக்க வேண்டும். கூட்டணி கட்சி தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். வீடு, வீடாக சென்று வாக்கு கேட்பது மிகவும் முக்கியம். சமூக நீதி, மதச்சார்பின்மைக்கு எதிரான கருத்தியல்களை விதைக்கலாம் என்ற எண்ணம் இனிமேல் பாஜகவுக்கு கனவிலும் வரக்கூடாது.தொகுதி மட்டுமின்றி ஒன்றிய, நகரம், பகுதி, பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தை கண்காணிக்க உள்ளேன். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை கடந்து தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். நீண்டகாலமாக தோளோடு தோளாக கொள்கை உணர்வுடன் கூட்டணி கட்சியினர் நம்மோடு பயணிக்கிறார்கள். நட்புணர்வோடு கூட்டணி கட்சிகளுக்கு சில தொகுதிகள் பெற்று சில தொகுதிகளை விட்டுக்கொடுத்துள்ளோம். எல்லா தொகுதியிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும். தோழமை கட்சிகளையும் இணைத்து தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.