திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்: பஸ் முன் பாய்ந்து ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை…! – ( பதை பதைக்கும் வீடியோ )
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சம்பவத்தன்று அதிகாலை பயணிகள் பலர் வெளியூர் செல்ல காத்திருந்தனர். அப்போது ஆண் ஒருவர், அங்கும்- இங்குமாக அலைந்து கொண்டு இருந்தார். அப்போது மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றின் பின்பக்க டயரில் திடீரென பாய்ந்தார்.
பின்புற சக்கரத்தில் விழுந்ததால் இதனை அறியாத டிரைவர் பஸ்சை ஒட்டியதால் அந்த வாலிபரின் தலையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் யார்? ,எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர் ரமேஷ் (வயது 42) என்பதும், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புதூர் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், அவர் ஓட்டல் நடத்தி வந்ததும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமடைந்து பஸ்சின் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ரமேஷின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.