திருச்சி- தஞ்சை ரோடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் சரவணன்.இவர் தஞ்சை ரோடு தனரத்தனம் நகர் எதிரே பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இங்கு மோகன் என்பவர் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். பெட்ரோல் பங்கில் வசூல் ஆகும் பணத்தை மதுரையைச் சேர்ந்த உறவினர் ஒருவருக்கு திருச்சியில் இருந்து மதுரைக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ் டிரைவரிடம் கொடுத்து அனுப்புவது வழக்கம். சம்பவத்தன்று பெட்ரோல் பங்கில்
வசூலான ரூ. 35 லட்சத்தை வழக்கம் போல தனியார் ஆம்னி பஸ் டிரைவரிடம் கொடுக்க சென்றபோது அங்கிருந்த ஒரு மர்ம ஆசாமி தான் பஸ் கிளீனர் தான் என்று அறிமுகம் செய்து கொண்டு பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் என்று கூறி ரூ.35 லட்சத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். ஆனால், பணம் மதுரை போய் சேரவில்லை. இது குறித்து மதுரையில் உள்ள உறவினரிடம் கேட்டபோது அப்படி யாரையும் நாங்கள்அனுப்ப வில்லை என்று தெரிவித்தனர். அப்போதுதான் மோகனுக்கு கிளீனர் என்ற பெயரில் வேறு யாரோ ஒருவர் பணத்தை பெற்று சென்றிருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் சரவணன் காந்தி மார்க்கெட் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை ஏமாற்றி ரூ.35 லட்சத்தை பெற்றுச் சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.