திருச்சி கிழக்கு தொகுதி த.வெ.க. பொறுப்பாளர் எஸ்.சௌகத் பிறந்தநாள் கோலாகல கொண்டாட்டம்…* துணை சபாநாயகர் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்து..!
திருச்சி கிழக்கு தொகுதி த.வெ.க பொறுப்பாளர் தர்கா எஸ்.சௌகத் பிறந்தநாள் விழாவானது நேற்று (ஆகஸ்ட் 14) அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி, மரக்கடை அருகே உள்ள ஏ.எம்.கே மஹாலில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் எம்.ரவிசங்கர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கதிரவன், த.வெ.க துணைப் பொதுச் செயலாளர் கே.அருள் விஜய் ஆகியோர் நேரில் வந்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர். மேலும் இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், முன்னாள் திருச்சி மாநகராட்சி துணை மேயர் ஜெ.சீனிவாசன், த.வெ.க பிரமுகர்கள் ப.செந்தில்நாதன், சிந்தாமணி எல்.முத்துக்குமார்,ஜெரால்டு, எனர்ஜி அப்துல் ரகுமான், மணப்பாறை திருநாவுக்கரசு, திருச்சி கிழக்குத்தொகுதி த.வெ.க பகுதி செயலாளர்கள் வரகனேரி எல். கௌதமன், பாலக்கரை ரா.சி. சூர்யா, ஏர்போர்ட் சி.வெள்ளைச்சாமி, மலைக்கோட்டை கி.சதீஷ்குமார், பாலக்கரை சிவா, காந்தி மார்க்கெட் டர்க்கீஸ், மலைக்கோட்டை எம்.கணேஷ் குமார், சிந்தாமணி எம்.ஜீவானந்தம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ்.டி. நிர்மல், இணை அமைப்பாளர் செந்தூர் ஸீ ஃபுட்ஸ் அருண், ஜே.பி.ஜோசப், உறுப்பினர் சேர்க்கை அணி அமைப்பாளர் இளமுகுந்தன், தகவல் தொழில்நுட்ப அணி நிஜாம், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் நிர்மலா, மாணவரணி அமைப்பாளர் ராவணன் விக்கி, மாவட்ட நிர்வாகிகள் சமஸ்பிரான் அருண், எம்.எஸ்.கௌதம்,சூர்யா விக்னேஷ், சௌந்தர்யா, கார்த்திகா, திருச்சி கிழக்குத்தொகுதி த.வெ.க வட்ட செயலாளர்கள் பிரதாப், சசி, ஆலன், ஹரி, ஆனந்த், பார்த்திபன், சிவகணேஷ், சரத், மாரிமுத்து, தனபால், ராஜேஷ், அஜய் அருண், அசார் குமரேசன், ஜெய்சங்கர், கோபி, யோகேஸ்வரன், பார்த்தி,கார்த்திக் ராஜா, செபாஸ்டின், மவுலி, அஜித், ஷேக், அன்சாரி, விக்னேஷ், பிராங்க்ளின், பாண்டி, நடராஜ், லோகேஷ், பரமேஷ்,காளீஸ், ஆரோஸ், மா.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன்,வி.சி.க. மாவட்ட செய்தி தொடர்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு சால்வை அணிவித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு அறுசுவை அசைவ விருந்தும் பரிமாறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியினரும், நிர்வாகிகளும் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.