வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அதிசயம் நிகழ உள்ளது. இதனை அண்ணா கோளரங்கத்தில் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணா அறிவியல் மையம் கோளரங்கம் திட்ட இயக்குனர் அகிலன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், வானியலில் ஒரு அற்புத நிகழ்வாக ஜனவரி 17 ந்தேதி முதல் பிப் 25ந் தேதி வரை 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் கிழக்கு திசையில் அணிவகுத்து காணப்படும். காலையில் கிழக்கு திசையில் பயணிக்கும் கோள்கள் மாலையில் மேற்கு திசையில் இரவு நெருங்க நெருங்க மறைய செவ்வாய், சனி, வியாழன், வெள்ளி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவது அபூர்வமான நிகழ்வாகும். இந்த அற்புதத்தை அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் இன்று 22 ந் தேதி முதல் 25-ந் தேதி வரை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் தொலைநோக்கி மூலம் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.