இன்ஜினியர் ஆர்.கே.விக்னேஷ் ஏற்பாட்டில் தமிழ்நாடு எலெக்ட்ரிக்கல் இன்ஸ்டாலேஷன் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஏ கிரேடு அமைப்பின் மொபைல் ஆஃப் அறிமுக விழா… திருச்சியில் துணை சபாநாயகர் எம்.ரவிசங்கர் தலைமையில் நடந்தது !
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு எலெக்ட்ரிக்கல் இன்ஸ்டாலேஷன் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஏ கிரேடு என்கிற அமைப்பு இயங்கி வருகிறது. இவ்வமைப்பில், தமிழக அரசின் எலெக்ட்ரிக்கல் துறையில் ஏ கிரேட் சான்று பெற்ற சுமார் 700க்கும் அதிகமான காண் ட்ராக்டர்களும், மூலப் பொருட்கள் சப்ளை செய்பவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வமைப்பின் புதிய செல்போன் ஆஃப் அறிமுக விழா மற்றும் செமினார் நிகழ்ச்சி திருச்சி ப்ரீஸ் ரெசிடென்சியில் நடைபெற்றது. திருச்சி மண்டல துணைத்தலவரும்,தமிழக அரசின் ஏ கிரேட் எலெக்ட்ரிக்கல் காண்ட்ராக்டருமான இன்ஜினியர் ஆர்.கே.விக்னேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில தலைவர் கே.ரமேஷ், செயலாளர் டி.சந்தானம், பொருளாளர் சி.உமா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் எம்.ரவிசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய செல்போன் ஆஃப்பை அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசும்போது ” தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, நேர்மையான, ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு முன்பிருந்த “கட்சி நிதி” கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் நானும் எலெக்ட்ரிகல் இன்ஜினியர் தான். அதனால் உங்களது கஷ்ட, நஷ்டங்களை நன்கறிவேன். உங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் கூறலாம். உங்களுக்கும், அரசுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு நிச்சயமாக வேண்டியதை செய்துதர பாடுபடுவேன்” என பேசினார். இதற்கடுத்து பேசிய இவ்வமைப்பின் மாநில தலைவரான கே.ரமேஷ்,” நமது அமைப்பிற்கென செல்போன் அப்ளிக்கேஷன் தொடங்கப்பட வேண்டும் என்பது நமது பலவருட கனவு. அது கடந்த 9 மாத கடின உழைப்பிற்குப்பிறகு தற்போது நினைவாகியுள்ளது. அதன்படி டி.என்.ஐ.இ.ஏ. சோர்சிங் ஆஃப், மெம்பர்ஸ் & சப்ளையர்ஸ் ஆஃப் என இரண்டு செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், எங்கிருந்தாலும் புதிய உறுப்பினர்கள் சேரலாம். தமிழக அரசின் முக்கிய அரசாணைகள், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் முக்கிய அப்டேட்கள், நலத்திட்டங்கள் ஆகியவற்றை இந்த செல்போன் ஆஃப் மூலம் தெரிந்து கொள்ளலாம். மிக முக்கியமாக எலெக்ட்ரிக்கல் துறை சார்ந்த தொழில் செய்பவர்களும், மூலப்பொருட்கள் சப்ளை செய்பவர்களும், இணைந்து செயலாற்றுவதன் மூலம் தொழிலை விரிவுப்படுத்துவதுடன் தங்களுக்குள் தொடர்புகளை வலுப்படுத்தி ஒருகுழுவாக இணைந்து செயலாற்ற முடியும்” என்றார். தொடர்ந்து பல துறைசார் நிபுணர்களின் செமினார் வகுப்புகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில இணைச் செயலாளர்கள் பி.பி. ரவீந்திரநாத், ஜி.கௌதம், மாநில துணைத்தலைவர்களான சென்னை கார்த்திகேய பாண்டியன், கோவை ஆறுமுகம், வேலூர் எஸ்.கோவலன், கடலூர் ஏ.முருகவேல், மதுரை எஸ்.கார்த்திகேயன், திருச்சி ஆர்.கே.விக்னேஷ்,திருநெல்வேலி கே.நாகராஜன், சேலம் என்.செந்தில்குமார் மற்றும் கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.