திருச்சி மாவட்ட கூடுதல் குடும்ப நல நீதிமன்றம்:- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி காணொளி வாயிலாக திறந்து வைத்தார்..!
திருச்சி மாவட்ட கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தை தலைமை நீதிபதி சுஷ்ரீத் அரவிந்த் தர்மாதிகாரி காணொளி மூலமாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட நீதிபதி எம்.கிறிஸ்டோபர் வரவேற்புரை யாற்றினார்.

திருச்சி மாவட்ட போர்ட் போலியோ நீதிஅரசர் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் தயாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன், மாநகர காவல் ஆணையர் என் .காமினி, மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங், திருச்சி வழக்கறிஞர் சங்க தலைவர் எஸ். பாலசுப்ரமணியன் செயலாளர் ஆரோக்கியசாமி, நிர்வாகிகள் கண்ணன், சுதா, ராஜா ரவிவர்மா, பிரதீப், குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் பி .சுரேஷ், துணைத் தலைவர்கள் சசிகுமார், பிரபு செயலாளர் பி.வி.வெங்கட் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மூத்த வழக்கறிஞர்கள், முசிறி, தொட்டியம், மணப்பாறை, லால்குடி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் என 700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் தலைமை குற்றவியல் நீதிபதி என் .செந்தில் முரளி நன்றியுரை ஆற்றினார்.

Comments are closed.