Rock Fort Times
Online News

திருச்சியில் யானை தந்தங்களை பதுக்கி விற்க முயன்ற 4 பேரை மடக்கியது வனத்துறை…!

திருச்சியில் யானை தந்தம் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மத்திய வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் தலைமையிலான வனதுறையினர் எடமலைப்பட்டிபுதூர், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சேதுராப்பட்டி போன்ற இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (49)என்பவர் வீட்டில் 2.9 கிலோ யானை தந்தம் மற்றும் மான் தோல் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும், சட்ட விரோத வணிகத்துக்கு உடந்தையாக இருந்த வெங்கடசுப்பிரமணியன்(65), முரளி (51), பாண்டுரங்கன்(60) ஆகியோரை கைது செய்து, ஸ்ரீரங்கம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி 4 பேரும், 15 நாட்கள் காவலில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தவெக செயற்குழு கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி தந்த விஜய்...! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..!

1 of 899

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்