வருகிற கல்வி ஆண்டு முதல் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் – கல்லூரி கல்வி இயக்குனர் தகவல்…!
வருகிற கல்வி ஆண்டில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும் என கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்துள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி வகுப்புகள் துவங்கும். செமஸ்டர் தேர்வுகள் அக்டோபர் 31ல் தொடங்கி, நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். டிசம்பர் 16ம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இந்த கால அட்டவணையை அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளும் பின்பறற் வேண்டும் எனவும் கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed.