புற்றுநோயை வென்றவர்கள் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை உலகிற்கு பறைசாற்றுவதற்காகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், புற்றுநோயை வென்றவர்களுக்கு இந்த சமுதாயம் செய்ய வேண்டிய கடமைகளையும், சலுகைகளையும் நினைவூட்டும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் திருச்சி ஜி.வி.என். கேன்சர் இன்ஸ்டிடியூட் சார்பில் புற்றுநோயை வென்றவர்கள் தின விழா (சர்வைவர்ஸ் டே) திருச்சி சாலை ரோடு, இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் ஹாலில் இன்று (30-06-2024) நடைபெற்றது. இதில், ஜி.வி.என். புற்றுநோய் மருத்துவமனை மூத்த நர்சிங் ஊழியர் புவனேஸ்வரி வரவேற்று பேசினார். சென்னை மகப்பேறு மருத்துவர் ஹேமலதா புகழேந்தி, ஜி.வி .என். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் வி.ஜே. செந்தில், ஜி.வி .என் கேன்சர் இன்ஸ்டிட்யூட் மருத்துவ தலைவர் அருண் சேஷாசலம், கதிர்வீச்சு மருத்துவர் சோபியா ராஜேஷ் ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி ராஜலக்ஷ்மி, கௌரவ விருந்தினர்களாக சீனிவாசன் மெடிக்கல் காலேஜ் டீன் துளசி மற்றும் ஜி.வி .என். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஐரின் லைட் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் உளவியலாளர் சௌந்தர்யா நன்றி கூறினார்.
Comments are closed.