Rock Fort Times
Online News

மார்பக புற்றுநோயை வென்றவர்களுக்கான விழா…

திருச்சி சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் விஸ்வநாதன் மருத்துவமனை சாா்பில் நடந்தது.

திருச்சி சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் விஸ்வநாதன் மருத்துவமனை இணைந்து நடத்திய மார்பக புற்றுநோயிலிருந்து வென்றவர்களுக்கான விழா திருச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இவ்விழாவில் முழு மருத்துவ வசதி கொண்ட மேம்மோ பஸ், ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 3000 மற்றும் 7620 மூலம் 2012ல் பத்ம பூஷன் விருது பெற்ற டாக்டர் பி.சாந்தா அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சியா் ஜெயஸ்ரீ ஐஏஎஸ் மற்றும் ரோட்டரி முன்னாள் கவர்னர் ரவீந்திரன் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.

                              
இந்த வண்டியானது  26 ஆயிரம் கிலோமீட்டா்கள் பயணித்து, 356 முகாம்கள் நடத்தி, 3 லட்சத்து 25 ஆயிரம் பெண்களுக்கு சுய பரிசோதனை செய்முறை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் 35125 பெண்களுக்கு மேம்மோகிராம் பரிசோதனை செய்து அதில் 31 பெண்களுக்கு ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியப்பட்டு, குணமடைய வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் மார்பக புற்றுநோயிலிருந்து வென்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினைரை கௌரவப்படுத்தும் விதமாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் வருவாய்த்துறை கூடுதல் ஆணையர் நித்யா, ரோட்டாி கிளப் ஆா்.ஐ.டி 3000 மாவட்ட கவா்னா் ஆா். அனந்த ஜோதி, ரோட்டரி கிளப் ஆா்.ஐ.டி 3000 முன்னாள் கவர்னர் மற்றும் ஷாநவாஸ் மருத்துவமனை நிறுவனா் பேராசிரியர் டாக்டர் ஏ. சமீர் பாஷா, ஹலோ எப்எம் ஸ்டேஷன் மேனேஜா் டெய்ாி சஹா ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா். மேலும் இவ்விழாவில் “The Compassionate Journey Of Mammo Bus” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்