Rock Fort Times
Online News

புளியஞ்சோலை சுற்றுலா தலம் மூடல்…

கனமழை காரணமாக வனத்துறையினர் நடவடிக்கை.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது புளியஞ்சோலை. இது நாமக்கல், சேலம் , பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்ட  மக்களுக்கு சுற்றுலா தலமாக விளங்குகிறது.  கடந்த சில தினங்களாக கொல்லிமலை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும்   கனமழையின் காரணமாக புளியஞ்சோலை ஐயாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்பட்டதுள்ளது.  இதனால்  நேற்று முதல் புளியஞ்சோலை அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள்  ஆற்றுக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து   புளியஞ்சோலைக்கு  சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வனத்துறையினரால்  தடை உத்தரவு போடப்பட்டு சுற்றுலாத்தலம் மூடப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்