திருச்சியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த நகரப் பேருந்து “டமார்” என பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு சுமார் 70 பயணிகளுடன் நகர பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. உறையூர் வழியாக அந்த பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையில் உள்ள பள்ளத்தில் “டமார்” என இறங்கியது. இதில், பேருந்தின் முன்புற சக்கரம் பள்ளத்தில் வசமாக சிக்கிக் கொண்டது. இதனால், பயணிகள் அச்சத்தில் அலறினர். ஆனால், அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் அவர்கள் கீழே இறக்கி விடப்பட்டு மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தபகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர்க்குழாய் அவசரக் கோலத்தில் புதைக்கப்பட்டதால் இந்த திடீர் பள்ளம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் ஜேசிபி எந்திரம் மூலம் பேருந்து மீட்கப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Comments are closed.