மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: 2 கிராம மக்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குவிந்து போராட்டம்…!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தாளக்குடி மற்றும் கீரமங்கலம் ஆகிய இரண்டு கிராமங்களும் ஊராட்சியாக இருந்து வருகிறது.
இதனை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்களிடம் எந்த கருத்தும் கேட்காமல இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 100 நாள் வேலை திட்டம் பறிபோகும். தண்ணீர் வரி, வீட்டுவரி, நிலவரி போன்ற வரி இனங்கள் அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும்.ஆகவே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை கைவிடக் கோரியும் 2 கிராம மக்களும் திரண்டு வந்து இன்று ( 23-01-2025) திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து நுழைவு வாயிலில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கிராம மக்களை சந்தித்து உங்கள் கோரிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் சென்று அங்குள்ள அதிகாரியிடம் மனு அளித்தனர்.
Comments are closed.