திருச்சி தேவதானம் காவேரி ரோடு பகுதியில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ஸ்ரீரங்கம் தொழிலாளர் நலத்துறை சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டனர் .அப்போது குழந்தை தொழிலாளர்கள் இரண்டு பேர் அங்கு ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து, அவர்களை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரி சாந்தி கொடுத்த புகாரின் பேரில், உரிமையாளர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.