திருச்சி நாகமங்கலம் அருகே உள்ள நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்( வயது35). கொத்தனாரான இவர் ஏற்கனவே ஒரு பெண்ணை ஏமாற்றிய வழக்கில், கடந்த 2011-ம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், சிறையில் இருந்து வெளியே வந்த அவர் அதே பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி இன்று நாகமங்கலம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கி வருமாறு ஒலிபெருக்கி மூலம் அழைத்தனர். அவர் கீழே இறங்க மறுத்து செல்போன் கோபுரத்திலேயே இருந்தாா். உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் நான்கு மணிநேர போராட்டத்துக்கு பிறகு இளைஞர் கீழே இறங்கினார். கீழே இறங்கிய இளைஞருக்கு முதல் உதவி வழங்கப்பட்டுது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.