மதுரை மாவட்டம் பெத்தானியபுரத்தை சேர்ந்தவர் பேட்ரிக் சந்திரன். இவரது மனைவி ஜோஸ்பின் மல்லிகா (வயது 40). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மதுரையிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றனர். காரை நிதிஷ்குமார் ( 23) ஓட்டினார். திருச்சி-மதுரை சாலையில் கார் வந்தபோது திடீரென்று சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியன் மீது மோதியது. இதில், கார் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஜோஸ்பின் மல்லிகா பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிாிழந்தாா் . இந்த விபத்து குறித்து திருச்சி க ண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்து காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.