பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் திருச்சியில் 27ம் தேதி ஆர்ப்பாட்டம்…!
திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர்கள் அழைப்பு
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 23.07.2024 அன்று மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்காமல் புறக்கணித்ததோடு ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிகநிதி ஒதுக்கி அரசியல் செய்துள்ளதை கண்டித்து நமது கழகத்தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்கவும், கழக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின் படியும் மத்திய அரசை கண்டித்து திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை
செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
Comments are closed.