ரசாயனங்கள் பயன்படுத்தி மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், மாம்பழங்களை ரசாயனம் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்தால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதனை கண்டறிய அதிகாரிகள் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தைகள், காய்கறி கடைகள் மற்றும் குளிர்சாதன கிடங்குகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்கள் மீது சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். ஆய்வின்போது விதிமுறைகள் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதுடன், மீண்டும் மீண்டும் தவறு செய்தால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். பொதுமக்களின் உடல்நலனை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இயற்கையான முறையில் பழுத்த மாம்பழங்களையே விற்பனை செய்ய வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Comments are closed.