திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஆதிகுடி கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைப்புலி ராஜா என்கிற ராஜா. சரித்திர குற்ற பதிவேடு பட்டியல் ரவுடியாக வலம் வரும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில் லால்குடி அருகே உள்ள ஆங்கரை மலையப்பபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான நவீன்குமார் என்பவரை முன்விரோதம் காரணமாக கலைப்புலி ராஜா தனது நண்பர்கள் ஸ்ரீநாத் உள்ளிட்ட நான்கு பேருடன் சேர்ந்து கடந்த 5 ம் தேதி இரவு வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த லால்குடி போலீசார், கலைப்புலி ராஜா உள்ளிட்ட 4 பேரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில லால்குடி அருகே உள்ள தச்சன்குறிச்சி வனப்பகுதியில் கலைப்புலி ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ரகுபதிராஜா உத்தரவின்பேரில் லால்குடி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது கலைப்புலி ராஜா, தான் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்ற போது தங்களை தற்காத்துக் கொள்வதற்காக காவல் ஆய்வாளர் சரவணன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராஜாவின் வலது காலில் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த ராஜா சுருண்டு கீழே விழுந்தார்.
அவருடன் இருந்த ஸ்ரீநாத் அங்கிருந்து தப்பித்து ஓடும்போது கல் தடுக்கி கீழே விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். ராஜாவின் காலில் துப்பாக்கி குண்டு துளைத்ததில் ரத்த நாளம் பாதிக்கப்பட்டது. இதனால் ராஜா உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றார் . இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவர்கள் ராஜாவின் வலது காலை அகற்றி அவர் உயிரை காப்பாற்றினர். அரிவாளை தூக்கிய ரவுடி காலை இழந்த சம்பவம் சக ரவுடிகளுக்கு அடிக்கப்படும் எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.
1
of 842
Comments are closed.