Rock Fort Times
Online News

இம்மானுவேல் சேகரனார் நினைவிடத்தில் தமிழக அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை…!

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுதினம் இன்று(11-09-2026) அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அமைச்சர்கள் நிர்மல்குமார். அருண்ராஜ், பிரபு, மதன் ராஜா, ராஜீவ், விக்னேஷ்
மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். முதலில், இம்மானுவேல் சேகரனாரின் புதிய மணி மண்டபத்தில் மாலை அணிவித்தும். அதன் பின்னர் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர். திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சியினரும் இம்மானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். முக்கிய அரசியல் தலைவர்கள் வருகையால் பரமக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்