Rock Fort Times
Online News

தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினராக மணப்பாறை எம்எல்ஏ ஆர்.கதிரவன் உட்பட 14 பேர் நியமனம்…

தமிழ்நாடு சட்டமன்றத்தின் 2026-2027 நிதியாண்டிற்கான புதிய மதிப்பீட்டு குழுவை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்துள்ளார். இக்குழுவில் தலைவர் உட்பட மொத்தம் 14 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கனர். அதன்படி சைதாபேட்டை எம்.எல்.ஏ அருள் பிரகாசம் தலைவராகவும், எம்.எல்.ஏக்கள் மணப்பாறை ஆர்.கதிரவன், விக்ரவாண்டி சிவகுமார், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், திருப்பூர் தெற்கு பாலமுருகன், திருத்துறைபோண்டி மாரிமுத்து, திருவள்ளூர் அருண்குமார், பல்லாவரம் காமாட்சி, கீழ்வைத்தினான்குப்பம் செந்தில்குமார் ஆகியோரும் அலுவல் சாராத உறுப்பினர்களாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவை முன்னவரும் அமைச்சருமான கே. ஏ. செங்கோட்டையன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழக சட்டமன்றத்தின் மதிப்பீட்டுக் குழு என்பது அரசின் நிதிநிலை மற்றும் திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் மிக முக்கியமான ஒரு நிதிக்குழுவாகும். இந்த குழுவின் அங்கீகாரம் மற்றும் ஆய்வுகள், மாநில நிர்வாகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. நிதி வரவு – செலவு திட்டத்தில் குறப்பட்டுள்ள நிதி நியமானவையதானா? என்பதை இக்குழு மாநிலம் முழுவதும் விரிவாக ஆய்வு செய்கிறது. அரசுத் திட்டங்கள், தேவையற்ற செலவுகளை குறைத்து, அதற்கான ஆலோசனைகளையும் மாற்று வழிகளையும் இக் குழு வழங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று அரசு துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கட்டுமான பணிகள் போன்றவற்றை இக் குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்கின்றனர். இதன் மூலம் திட்டங்கள் காலதாமதம் இல்லாமல், தரமாக மக்கள் பயன்பாட்டிற்கு வருவதை இக் குழு உறுதி செய்யும். சுயேட்சையான அதிகாரமிக்க இந்த குழு அளிக்கும் அங்கீகாரமும், அறிக்கைகளும், தமிழக அரசின் நிதி மேலாமையை சீரமைக்கவும், ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் இன்றியமையாதது ஆகும். இப்படி பல்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு மதிப்பீட்டு குழு உறுப்பினராக, மணப்பாறை தமிழக வெற்றிக்கழக எம்.எல்.ஏ ஆர். கதிரவன் நியமிக்கப்பட்டிருப்பது மணப்பாறை தொகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்