Rock Fort Times
Online News

திருச்சியில் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’: கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்…!

வாரம் 5 நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று(11-09-2026) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியிலும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.பி.ஐ. வங்கி முன்பு, அனைத்து வங்கி கூட்டமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்