Rock Fort Times
Online News

இம்மானுவேல் சேகரனார் திருவுருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை…!

தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளை முன்னிட்டு, திருச்சியில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரனார் திருவுருவப் படத்திற்கு கழக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, முன்னாள் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் துரைராஜ், கருணை ராஜா, குடமுருட்டி சேகர், சித்ரா பாரிவள்ளல் , டோல்கேட் சுப்பிரமணி, விஜயலட்சுமி கண்ணன், கருணாநிதி, ஜெயநிர்மலா, கலைச்செல்வி, செவந்திலிங்கம், கதிர்வேல், ராஜ் முகம்மது இளங்கோ, வாமடம் சுரேஷ்,
கமல் முஸ்தபா, மோகன்தாஸ், வாசுகி, முகேஷ் குமார், சுருளி, சிந்தை பாலமுருகன், கார்த்திக், சதீஷ், தஸ்தாபாய் ஜெயராம் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்