Rock Fort Times
Online News

கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடை ரத்து… * சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

தமிழகத்தில் உட்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமான பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், செயற்கை விலையேற்றத்தை தடுக்கவும், தமிழ்நாடு சட்ட விரோத கனிமச் சுரங்கம் கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை 9-ம் தேதி திருத்தம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக்கற்களை கொண்டு செல்ல ஜூலை 27-ம் தேதி முதல் 3 மாதத்துக்கு தடைவிதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை மேலும் 3 மாதத்துக்கு தமிழக அரசு நீட்டித்தது. இந்தத் தடையை நீக்கவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு, கேரள முதலமைச்சர் சதீஷன் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையே, கட்டுமான பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று(17-11-2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் இருந்து கருங்கல், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடை விதிக்க வழிவகை செய்த தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம், கனிம போக்குவரத்து, சேமிப்பு, தடுப்பு திருத்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனத் உயர்நீதி மன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்