Rock Fort Times
Online News

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு… தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி…!

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜைகளுக்காக இன்று (நவம்பர் 16) மாலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நாளை முதல் (நவம்பர் 17) தினமும் 80,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து 41 நாட்கள் நடைபெறும் இந்த மண்டல கால பூஜைகள் வருகிற டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடைகின்றன. இதனைத் தொடர்ந்து அன்றிரவு கோயில் நடை சாத்தப்பட்டு, மீண்டும் மகரவிளக்கு திருவிழாவிற்காக டிசம்பர் 30ம் தேதி மாலை திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்