Rock Fort Times
Online News

டெல்லியில் சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்பு…!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் கலந்து கொண்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் நடைபெற்றுவரும் புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த தலைவர் ப. சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரின் மனைவி டிம்பிள் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, ஜம்மு – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்