தமிழ்நாட்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதிகளில் வெளியாகும்-பள்ளி கல்வித்துறை…!
மக்களவை தேர்தல் காரணமாக 10, 12ம் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல் பரவிய நிலையில் இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து மார்ச் 4ம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு 25 ம் தேதி முடிவடைந்தது.

அதேபோல, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கடந்த மார்ச் 26 அன்று தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி அண்மையில் நிறைவடைந்தது. இதனையடுத்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி, மே 6 மற்றும் மே10 ம் தேதிகளில் 12ம் வகுப்பு, 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Comments are closed.