தமிழக வணிகர் சம்மேளன மாநில, மாவட்ட தலைமை நிர்வாகிகள் நியமன அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் தமிழ்செல்வம் தலைமை தாங்கினார். இதில் திருச்சி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் மைதீன்,மாவட்ட அமைப்பாளர் சிவகுமார், திருச்சி கிழக்கு கீதா, நடராஜன், ஏர்போர்ட் ரவிசங்கர், மாநிலஒருங்கிணைப்பாளர் பானுமதி ஜகதா, மாநில அமைப்பு செயலாளர் கௌரிசங்கர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, உயிரிழந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Comments are closed.